National Land Finance Co-operative Society’s Tan Sri K.R.Soma Language & Literary Foundation will be organizing 4th International Book Award. This contest is open to locals and international participants. Recent works from novels, history and research published during 2016 & 2017 are eligible for the award. The works must not be less than 200 pages, lie within the stream - relevant constraints of culture, techniques, legacy and tradition.
The published works ,must be a source of inspiration or encouraging to the immense growth, development
Books received for the contest will be evaluated by a committee consisting of 3 judges
Evaluation and selection of winning book will be held once in 2 years
Judges will be appointed by the Foundation
Judges will be appointed from other countries
The published works, must be a source of inspiration or encouraging to the immense growth, development and
innovation to the Tamil language and community
To protect the interests of the print medium amidst the growing attention to the electronic
media, and for international recognition to Tamil writers.
நூலகத்திற்கு தேவையான மேஜை நாற்காளிகள் தருவிக்கப்பட்டு, விளக்குகள் மற்றும் குளிர் சாதன வசதி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. (28 பேர் அமரக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது)
1000 நூல்கள் மலாயா பல்கலைக்கழகத்தில் நூல்களில் உடைமை (ownership),
உள்ளீடு (input) இருப்பு (inventory) குறித்த குறியீடுகள், முத்திரை இடுதல்
போன்ற பணிகள் முடிவடைந்துள்ளன.
இரண்டாவது கட்டமாக 650 நூல்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம் சனிக்கிழமை(31.8.2019) புத்தகங்களை நூல் நிலையத்திற்கு கொண்டு வந்து அதனை நூல் அடுக்கத்தில் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற் கொள்ள அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
நிர்வாக பயன்பாட்டுக்கு 2 கணிணிகள் / 1 அச்சுப்பொறி வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நூல்களின் தகவல்களுக்காக நூல் நிலைய இணையதளம் உருவாக்கப்படும்
தொகுப்பு: கே.பன்னீர்செல்வம்
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், 27-ஆம் ஆண்டாக, சிறுகதை, மரபுக்கவிதை, கட்டுரை, புதுக்கவிதை, மாணவர்களுக்கான சிறுகதை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய இலக்கியப் போட்டிகளைக் கடந்த ஆண்டுகளைப்போலவே இந்தாண்டும் நடத்துகின்றது. இலக்கியத்துறையில் ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கும், மாணவர்களுக்கும் என இப்போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.
தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் கீழ்க்காணும் துறைகள் சார்ந்து மிகுபயன் விளைவித்தல்.
அ. மொழிசார்ந்த இலக்கிய வடிவங்களின் புதிய பரிணாம வளர்ச்சிகள்
ஆ. இனம் சார்ந்த கலை, கலாச்சாரப்பண்பாட்டுக் கூறுகளை வளப்படுத்துதல்.
இ. சமுதாய முன்னேற்றத்திற்கு கல்வி, அறிவியல், வாணிகம், தொழில் சார்ந்த படைப்பிலக்கியங்களின் வழி வாழ்க்கை மேம்படுதல்.
ஈ. மனிதநேயமும் அகமேம்பாடும் படைப்பிலக்கியங்களின் வழி வளர்த்தல்.
தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் கீழ்க்காணும் துறைகள் சார்ந்து மிகுபயன் விளைவித்தல்.
1. முதல் பரிசு - மலேசிய ரிங்கிட் - 2,500
2. இரண்டாம் பரிசு - மலேசிய ரிங்கிட் - 1,750
3. மூன்றாம் பரிசு - மலேசிய ரிங்கிட் - 1,250
4. ஆறுதல் பரிசுகள் - மூன்று தலா மலேசிய ரிங்கிட் - 500
பொது பிரிவு
அ. சிறுகதை ஆ. கட்டுரை இ. மரபுக்கவிதை ஈ. புதுக்கவிதை
(ii). மாணவர்
அ. சிறுகதை
அ. துறை - கொடுக்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு துறைச்சார்ந்ததாக இருக்க வேண்டும்
ஆ. மொழி - தமிழ்
இ. மொழித்தரம் - தமிழ்மொழியின் இலக்கணம், சொல்லாட்சி, மரபு ஆகிய கூறுகளில் தரமுடையதாக இருக்க வேண்டும்
ஈ. பங்கேற்புத்தகுதி - கொடுக்கப்படும் தலைப்புக்கேற்பவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும்
பொதுப்பிரிவு
மலேசிய நாட்டு குடியுரிமையுள்ள எழுத்தாளர்கள் மட்டுமே இந்தப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.
ஒருவர் ஒரு துறையில் ஒரு படைப்பை மட்டுமே போட்டிக்கு அனுப்பி வைக்கமுடியும்.
படைப்புகள் தங்களது சொந்தப் படைப்பு என்பதை உறுதிப்படுத்தும் கடித த்துடன் தங்களின் தெளிவான அடையாள அட்டையின் நகலும்,
அண்மையப் புகைப்படமும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
(படைப்பாளர் தமது அசல் படைப்புடன் மேலும் இரு நகல்கள் எடுத்து 3 படிகளாக அனுப்பி வைக்கவேண்டும்.)
மாணவர் பிரிவு
மாணவர் பிரிவு படைப்பாளர்கள், உயர் கல்விக்கூடங்கள் (ஆறாம் படிவம் / கல்லூரிகள் / மெட்ரிகுலேஷன்) மற்றும்
பல்கலைக் கழகங்களில் முழுநேரமாக பயில்கின்றவர்களாக இருக்கவேண்டும்.
போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் தங்களின் சொந்தப்படைப்பு என்பதை உறுதி செய்யும் வகையில், தங்கள் கல்விக்கூடங்களின்
பொறுப்பாசிரியரின் உறுதிச்சான்றினையும்
இணைத்து, தெளிவான அடையாள அட்டையின் நகலுடன், அண்மையில் எடுத்துக்கொண்டப் புகைப்படத்தோடு அனுப்புதல் வேண்டும்.
சிறுகதை
சிறுகதைகள், மனித வாழ்வியலோடு ஒட்டிய சம்பவங்கள், சமுதாய உணர்வுகள், சீர்திருத்தக் கருத்துக்கள் ஆகியவற்றை
சுவைப்படச் சித்தரிப்பதாக 5 பக்கங்களுக்குள் அமைய வேண்டும்
மரபுக்கவிதை
எண்சீர், அறுசீர் விருத்தங்களாகவும், நான்கடி சந்தப்பாடலாகவும் “ துள்ளும் நாள் எந்நாள் ” என்ற தலைப்பில் 80 வரிகளுக்கு
மேற்போகாமல், கவிதைகள் எழுதப்பட வேண்டும். மலேசியத்தமிழர்களின் முன்னேற்றம், மேன்மைக்கான வழிகள் என்ற
கருப்பொருள் நாட்டப்படுவதுடன், மரபு பிசகாமல் கவிதைகள் அமைய வேண்டும். மேலும் ஓவ்வொரு படைப்பிலும் 10 உவமைகளுக்கு
குறையாமல் இடம் பெற வேண்டும்.
புதுக்கவிதை
“கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற பொருளில், சமுதாய மேம்பாட்டுக்கு, 80 வரிகளுக்கு மிகாமல் புதுக்கவிதை அமைய வேண்டும்.
எடுத்துக்கொண்டுள்ள தலைப்பை உள்ளடக்கிய புதுக்கவிதைகளாகவும் இருக்கவேண்டும்.
கட்டுரை தலைப்பு
"சமூக வலைத்தளங்களின் விளைபயன்"நாட்டில், மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப, சமூக ஒற்றுமை, அரசியல்,
மொழி இலக்கிய வளர்ச்சி, பொருளாதாரம் சார்ந்த தாக்கங்களை மையமாகக் கொண்ட, இன்றைய சூழ்நிலை,
எதிர்காலச் சவால்களை உள்ளடக்கிய கட்டுரையாகவும், உரிய சான்றுகள், துணை நூல்களின் குறிப்புகளுடனும் அமைய வேண்டும்.
மேற்கண்ட தலைப்பில் 8 பக்கங்களுக்கு மேற்போகாமல் கட்டுரை அமைய வேண்டும்.