பொது விதிகள்

(i) எல்லா படைப்புகளும் கணிணியில் தட்டச்சு (எழுத்துரு 12) செய்து அனுப்பப்பட வேண்டும்.
(ii) போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் அனைத்தும், வேறு எந்த நூல்களிலோ, சிறுகதை, கவிதைத் தொகுப்புகளிலோ, நாளிதழ்களிலோ, மாத, வார இதழ்களிலோ பிரசுரிக்கப் பட்டவையாகவோ அல்லது மின் ஊடகங்களில் வெளி வந்தவைகளாகவோ இருக்கக்கூடாது.
(iii) போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகள், குறிப்பிட்ட ஓர் இனத்தையோ, மதத்தையோ சிறுமைப்படுத்துவதாக இருந்தாலோ, இனத்துவேசம், தேச நிந்தனை, மற்றும் நாட்டுப்பற்றுக்கு ஊறு விளைவிப்பது போன்ற கருத்துக்களைக்கொண்டிருந்தாலோ, அவை பங்கேற்பில் இருந்து நீக்கப்படும்.
(iv) கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள், தனித்தாளில் தங்களின் முழுப்பெயர், புனைப்பெயர், முகவரியையும் ஆங்கிலத்தில் எழுதி, தங்களது படைப்புகளுடன் அடையாள அட்டையின் நகலையும் இணைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களும், தகவல்களும் இணைக்கப்படாவிடில். அனுப்பப்படும் படைப்புகள் போட்டிகளில் இருந்து தவிர்க்கப்படும். )


நடுவர்கள்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின், டான் ஸ்ரீ கே,ஆர் சோமா மொழி இலக்கிய அறவாரியம் நியமிக்கின்ற நடுவர்களால், வெற்றிப்பெறும் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.
நடுவர்களின் முடிவே இறுதியானது ஆகும்.
இந்தப் போட்டிகள் மற்றும் முடிவுகள் சம்பந்தமான எந்த வித கடிதம் அல்லது தொலை பேசி தொடர்புகள் வைத்துக்கொள்ளப்பட மாட்டா.
கூட்டுறவு சங்கத்தில் தற்போது பணிபுரிபவர்கள் இந்தப்போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
போட்டிக்குறிய எல்லா படிவங்களும் எதிர்வரும் 31.07.2019 ஆம் நாளுக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.